/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தில் 11 மாதத்திற்குபின் 800 மெகா வாட் உற்பத்தி
/
வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தில் 11 மாதத்திற்குபின் 800 மெகா வாட் உற்பத்தி
வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தில் 11 மாதத்திற்குபின் 800 மெகா வாட் உற்பத்தி
வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தில் 11 மாதத்திற்குபின் 800 மெகா வாட் உற்பத்தி
ADDED : ஜூன் 24, 2025 12:29 AM
சென்னை, வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தில், 11 மாதங்களுக்கு பின், 800 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 800 மெகா வாட் திறனில் வட சென்னை - 3 அனல் மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது. திட்ட செலவு, 10,158 கோடி ரூபாய்.
கட்டுமான பணிகள் முடிந்து, 2024 மார்ச், 7ல் சோதனை மின் உற்பத்தி துவங்கியது. ஆரம்பத்தில், 200, 400 மெகா வாட் என, மின் உற்பத்தி செய்யப்பட்டது.
மின் நிலையத்தில் முழு திறனில், 72 மணி நேரம் தொடர்ந்து மின் உற்பத்தி செய்தால்தான், மின் நிலையம் வணிக பயன்பாட்டிற்கு வந்ததாக அறிவிக்கப்படும்.
ஆனால், வட சென்னை - 3 மின் நிலையத்தில் தினமும் சராசரியாக, 500 மெகா வாட் மின் உற்பத்தி நடந்தாலும், 2024 ஜூன், 26, ஜூலை 26ல், முழு மின் உற்பத்தி செய்யப்பட்டாலும், தொழில்நுட்ப பிரச்னையால் அடுத்தடுத்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. பல்வேறு சோதனைகள் நடந்தின.
இந்நிலையில், 11 மாதங்களுக்கு பின் மின் நிலையத்தில் இம்மாதம், 21ம் தேதி இரவு, 8:17 மணிக்கு முழு திறனில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 21ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முழு அளவில் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. வார விடுமுறையால், 21, 22ல் தமிழக மின் தேவை குறைந்தது; காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, 8,500 மெகா வாட் மேல் மின்சாரம் கிடைத்தது.
இதனால், வடசென்னை - 3 மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. இரு வாரங்களில், மூன்று நாட்கள் முழு மின் உற்பத்தி செய்து, வணிக பயன்பாட்டிற்கு வந்தது குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***