/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடமாநில நபரிடம் வழிப்பறி தலைமறைவு குற்றவாளி கைது
/
வடமாநில நபரிடம் வழிப்பறி தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : ஏப் 17, 2025 12:17 AM
சென்னை, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 43. கடந்த 20 ஆண்டுகளாக, சேலம் மாவட்டத்தில் குடும்பத்துடன் கார்பென்டர் வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் வேலை நிமித்தமாக சென்னை வந்தவர், 31ம் தேதி அதிகாலை சேலம் செல்வதற்காக, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார்.
அப்போது, இருவர் கத்தி முனையில் தாக்கி 2,000 ரூபாயும், மொபைல் போனையும் பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரித்த பெரியமேடு போலீசார், அன்றைய தினம் இரவே ஸ்ரீதர், 23, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 27, என்பவரை, நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா, பெரியமேடு காவல் நிலைய பழைய குற்றவாளி. அவர் மீது 16 வழக்குகள் உள்ளன.