தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வடமாநில தொழிலாளர்கள் வீட்டை கொளுத்தி அடாவடி

வடமாநில தொழிலாளர்கள் வீட்டை கொளுத்தி அடாவடி

வடமாநில தொழிலாளர்கள் வீட்டை கொளுத்தி அடாவடி


ADDED : நவ 14, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 09:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுாரில் வட மாநில தொழிலாளர் தங்கிய வீட்டை, தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

சோழிங்கநல்லுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், வடமாநில தொழிலாளர்கள், தகர சீட்டு அமைத்து, வசித்து வருகின்றனர்.

இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றனர். இன்று (நவ.,14) இந்த வீட்டை, மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இதில், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது. துரைப்பாக்கம், சிறுசேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த துணி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. செம்மஞ்சேரி போலீசார், தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us