/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'நோட்டீஸ்'
/
294 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'நோட்டீஸ்'
ADDED : அக் 16, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை பகுதியில், 24 ஏக்கர் பரப்பளவு உடைய சித்தேரியில் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. தவிர, பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சித்தேரியில் கலக்கிறது.
இந்நிலையில், சித்தேரி கரை, மாங்குளம் பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 294 வீடுகளுக்கு, துணை தாசில்தார் விஜயானந்த் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று, வீடுகளை காலி செய்ய 'நோட்டீஸ்' வழங்கினர். 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.