/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அவசர உதவிக்கான எண்கள் ஸ்டிக்கர் ஒட்டும் போலீசார்
/
அவசர உதவிக்கான எண்கள் ஸ்டிக்கர் ஒட்டும் போலீசார்
ADDED : பிப் 19, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பொதுமக்களுக்கு அவசர உதவி தேவை என்றால், அவசர உதவி எண் 100 க்கு தான், தொடர்பு கொண்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், புதிய வழிமுறையை ஏற்படுத்தி உள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொது இடங்கள், வணிக நிறுவனங்களிலும், அவசர உதவிக்காக என்று 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு வருகிறது.
அந்த ஸ்டிக்கரில், அப்பகுதி செக்டார் எஸ்.ஐ., - காவலர்கள் பெயர், அவர்களின் மொபைல் போன் எண்கள், பெண்கள், குழந்தைகள், சைபர் பிரிவு, முதியோர் உதவிக்கான எண்களும் அச்சிடப்பட்டுள்ளன. அவசர உதவி தேவைப்படுவோர் அழைக்க வசதியாக, இந்த முயற்சி உள்ளது.

