ADDED : செப் 25, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், பரந்துார் விமான நிலையத்திற்கு ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை எடுக்க, தமிழக தொழில் வளர்ச்சி கழகம், செப்டம்பர் மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
இதை கண்டித்து, ஏகனாபுரம் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். நேற்று காலை, காரை கிராமத்தில் இயங்கும் பரந்துார் விமான நில எடுப்பு அலுவலகத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தினர் பெண்களுடன் வந்து, ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்ற வருவாய் துறையினர், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறி அனுப்பி உள்ளனர்.