sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குன்றத்துார் மலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது அதிகரிப்பு கபளீகரம்!: தொல்லியல் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தும் தொடர் அத்துமீறல்

/

குன்றத்துார் மலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது அதிகரிப்பு கபளீகரம்!: தொல்லியல் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தும் தொடர் அத்துமீறல்

குன்றத்துார் மலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது அதிகரிப்பு கபளீகரம்!: தொல்லியல் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தும் தொடர் அத்துமீறல்

குன்றத்துார் மலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது அதிகரிப்பு கபளீகரம்!: தொல்லியல் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தும் தொடர் அத்துமீறல்

2


UPDATED : ஜன 29, 2026 04:55 PM

ADDED : ஜன 29, 2026 05:04 AM

Google News

UPDATED : ஜன 29, 2026 04:55 PM ADDED : ஜன 29, 2026 05:04 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட குன்றத்துார் மலை மீது, நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிகரிப்பதால், தொல்லியல் சின்னங்கள் சேதமாகிஉள்ளன. ஆக்கிரமிப்பை அகற்ற அரசு துறை அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் தாராளமாக ஏற்படுத்தி கொடுப்பதாலும், மலை முழுதும் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் ஆபத்து உள்ளது.

குன்றத்துார் மலையில், பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள பகுதி ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும், மலையின் மற்ற பகுதிகள், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன.

இங்கு 1956 - 57ம் ஆண்டில் நடந்த அகழாய்வில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடங்கள், கல்லறைகள், ஆயுதங்கள் கண்டறியப்பட்டன.



இதனால், குன்றத்துார் மலை சர்வே எண் 1151/1ல் 22.90 ஏக்கர் பரப்பளவு மற்றும் மலை அடிவாரத்தில் 200 மீட்டர் சுற்றளவு, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தின் ஒழுங்குமுறை பகுதிக்குள் உள்ளதாக, மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்துள்ளனர்.

தடுப்பு வேலி இந்நிலையில், குன்றத்துார் மலை மற்றும் மலையின் அடிவாரத்தை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பராமரிப்பின்றி உள்ளன. இதனால், மலை மீது ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

குன்றத்துார் மலை மற்றும் மலை அடிவாரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு குன்றத்துார் நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மின் வாரியம், சார்பில் மின் இணைப்பு தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.

சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படுவதால், மலை அடிவாரத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலங்களின் விற்பனையும், தடையின்றி நடக்கிறது.

அரசியல் தலையீட்டால் மலை மீதுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, இதுவரை அதிகாரிகள் முயற்சி எடுக்கவில்லை. ஒரு வீடுகளை கூட இதுவரை அகற்றாததால், ஒருவரை பார்த்து ஒருவர் ஆக்கிரமித்து, துணிச்சலாக வீடுகளை கட்டி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் அதிக ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன.

குன்றத்துார் மலையடிவாரம் மற்றும் மலை மீது ஆக்கிரமித்து, 500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், தொல்லியல் சின்னங்கள் சேதமாகின்றன. ஆரம்பத்திலேயே, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தனை வீடுகள் மலையில் அமைந்திருக்காது.

வரும் காலங்களில், ஆக்கிரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மலை முழுதும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, மலையைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குன்றத்துார் மலை ஆக்கிரமிப்பு குறித்தும், ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், இதுவரை எந்த புகாரும் வரவில்லை' என்றார்.

முன் அனுமதி மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

குன்றத்துார் மலை மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஏழு சர்வே எண்களில் உள்ள நிலங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னத்தின், பாதுகாக்கப்பட்ட ஒழுங்குமுறை பகுதிகளுக்குள் உள்ளன.

பழங்கால நினைவு சின்னம் மற்றும் தொல்பொருள் தளம் மற்றும் எச்சங்கள் கண்டறியப்பட்ட இப்பகுதியில், அனைத்து திசைகளிலும், 200 மீட்டர் துாரம் வரை ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிக்குள் வரும்.

எனவே, குன்றத்துார் மலை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பட்டா, கட்டட அனுமதி வழங்க வேண்டாம் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் குன்றத்துார் சார் - பதிவாளர் அலுவலகம், குன்றத்துார் நகராட்சி அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

மேலும், இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் ஏதேனும் கட்டடம் கட்டியிருந்தாலோ அல்லது நிலம் வைத்திருந்தாலோ, அந்த நபரும் இந்த நிலத்தில் கட்டடம் கட்டுதல், ஏற்கனவே உள்ள கட்டடத்தை பழுதுபார்த்தல், புதுப்பித்தல் பணி செய்ய, முன் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுற்றுலா தலமாக்க பக்தர்கள் விருப்பம் குன்றத்துார் மலைமீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவில் அருகே உள்ள மலை பகுதி பராமரிப்பின்றி உள்ளதால், ஆக்கிரமிப்புகள் அதிகம் நடந்துள்ளன. மேலும், மலை மீது மது அருந்துவது, காதல் ஜோடிகள் தஞ்சமடைவது என, சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு பூங்கா, தியான மையம், குன்றத்துார் மலை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களால் மினி அருங்காட்சியகம் அமைத்து, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.



அகழாய்வில் கிடைத்தவை குன்றத்துார் மலையில், 1956 - 57ம் ஆண்டில் நடந்த அகழாய்வில், மட்கலன்களான தட்டு, தாங்கி, தாழி, இரும்பால் செய்யப்பட்ட கத்தி, வளையல்கள், கோடரி, ஈட்டி, ஆணி, குதிரை லாடங்கள், குறுவாள், உளி, அரிய கல்மணிகள், செப்பு நாணயங்கள், சுடுமண் பொம்மைகள் மற்றும் முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை, பூண்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.








      Dinamalar
      Follow us