/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அக்., 6 மெரினாவில் பிரமாண்ட 'ஏர் ஷோ'
/
அக்., 6 மெரினாவில் பிரமாண்ட 'ஏர் ஷோ'
ADDED : செப் 27, 2024 12:49 AM

சென்னை, இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை முன்னிட்டு, வரும் அக்., 6ம் தேதி காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மெரினா கடற்கரையில், விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்திய விமானப் படையின் 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
விமானங்கள் வானில் குட்டிக்கரணம் அடிப்பது, 'ஆகாஷ் கங்கா' குழுவினர் 'ஸ்கை டைவிங்'கில் விமானங்கள் நெருக்கத்தில் வந்து சாகசம் செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன.
'சாரங் ஹெலிகாப்டர்' குழு வான்கலைகளில் நிகழ்த்த உள்ள நிகழ்வுகளும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நம் நாட்டிலேயே தயாரான 'தேஜஸ்' விமானம், போர் ஹெலிகாப்டர் 'பிரசாந்த், கோட்டா, ஹார்வர்டு' உள்ளிட்டவையும் இதில் பங்கு பெறும். 23 ஆண்டுகளுக்குப் பின், சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், 15 லட்சம் பேர் பொதுமக்கள் பங்குபெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.