UPDATED : நவ 02, 2026 07:59 PM
ADDED : நவ 02, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், 28, பெருங்குடி, சி.பி.ஐ., காலனியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 26ம் தேதி அறையை பூட்டி, சாவியை கதவு அருகே வைத்து சென்றார். மாலை வந்தபோது, ‘இரு லேப்டாப்கள், டிராலி பேக்’ திருடுபோயிருந்தன. இதேபோல், துரைப்பாக்கம், பார்த்தசாரதி நகர் விடுதியில் விஜய், 21, என்பவர் லேப்டாப்பும் திருடப்பட்டது. புகார்களின்படி துரைப்பாக்கம் போலீசார், ஒடிசாவைச் சேர்ந்த விடுதி காவலாளி பிகாஸ் சேதி, 33, என்பவரை நேற்று கைது செய்து, மூன்று லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.
