ADDED : நவ 02, 2026 07:59 PM

வண்ணாரப்பேட்டை: டிரான்ஸ்பார்மரில் மின்னல் தாக்கி பழுது ஏற்பட்டதால், கடை வீதிகள் ஒன்பது மணி நேரம் இருளில் மூழ்கின.
பழைய வண்ணாரப்பேட்டை, நாராயணப்பன் தெரு, என்.என்.கார்டன் மெயின் தெரு, சின்ன மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று (நவ.,2) காலை 11:00 மணிக்கு மின்னல் தாக்கியதால், மின் தடை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மின்சார துறை ஊழியர்கள், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மழை காரணமாக, பழுதுபார்க்கும் பணி நீடித்தது.
நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், காய்கறி, துணி, செருப்புக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட முடியாமல் பாதிக்கப்பட்டன. இதனால், கடை வீதிகள் இருளில் மூழ்கின.
பழுது சரிசெய்யப்பட்டு, ஒன்பது மணி நேரத்துக்குப் பின் இன்று இரவு 6:50 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
