ADDED : ஏப் 10, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்படி, நேற்று முன்தினம், தாம்பரம்- - மதுரவாயல் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் இருந்த போலீசார், அனகாபுத்துார் அருகே அணுகு சாலையில், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சில்லுார் சின்சானி, 26, என்பதும், அவரிடம் 22 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.
மேலும், ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்களில், உதவியாளர் போல் கஞ்சா கடத்தி வந்து, குறிப்பிட்ட இடங்களில் சப்ளை செய்வதும் தெரிந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரின் கூட்டாளிகள் குறித்து விசாரிக்கின்றனர்.

