/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து ஒடிசா நபர் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து ஒடிசா நபர் உயிரிழப்பு
ADDED : டிச 01, 2024 09:21 PM
மதுரவாயல்:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புலேஸ்வர், 34. இவர், சென்னை, வானகரம் ராஜாஸ் கார்டன் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மழை காரணமாக, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக புலேஸ்வர் மின் மோட்டாரை ஆன் செய்தார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து புலேஸ்வர் துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் புலேஸ்வர் உயிரிழந்தது தெரியவந்தது. மதுரவாயல் போலீசார் உடலை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.