/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காமாட்சி அம்மனுக்கு காசு மாலை அர்ப்பணிப்பு
/
காமாட்சி அம்மனுக்கு காசு மாலை அர்ப்பணிப்பு
ADDED : செப் 29, 2025 02:28 AM
சேலையூர்: ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்துவரும் நவராத்திரி மகோத்சவத்தில் நேற்று, காமாட்சி அம்மனுக்கு காசு மாலை அர்ப்பணிக்கப்பட்டது.
காஞ்சி மாடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்சவத்தை நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி மகோத்சவத் தின் ஒரு பகுதியாக, அனுஷம் நட்சத்திர தினமாகிய நேற்று, காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதியின் முன் ஸ்வர்ண காசு மாலை அர்ப்பணிக்கப்பட்டது.
நவராத்திரி மகோத்சவத் தில், இன்று இரவு 7:00 மணிக்கு, ஆதித்ய மாதவன், தரினி வீரராகவன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.