/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நம்ம பசங்க அங்காடி' கோட்டூர்புரத்தில் துவக்கம்
/
'நம்ம பசங்க அங்காடி' கோட்டூர்புரத்தில் துவக்கம்
ADDED : செப் 13, 2025 12:55 AM
சென்னை மாற்றுத்திறனாளிகள் வடிவமைத்த, கைவினை பொருட்களின் கண்காட்சி, கோட்டூர்புரத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.
'வித்யாசாகர்' அமைப்பு சார்பில், 'நம்ம பசங்க அங்காடி - 2025' என்ற தலைப்பில், கைவினை பொருட்கள் கண்காட்சி, கோட்டூர்புரம், ரஞ்சித் சாலையில் உள்ள வித்யாசாகர் அமைப்பு அலுவலகத்தில், இன்றும் நாளையும் நடக்கிறது.
இதில், மாற்றுத்திறனாளிகள் வடிவமைத்த கைப்பக்கங்கள், நோட்டு புத்தகம், காகித பைகள் மற்றும் நகைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இதேபோல், மாநில முழுதும் பல்வேறு மாற்றுத்திறனாளி அமைப்புகளின், 40க்கும் மேற்பட்ட 'ஸ்டால்'கள் வைக்கப்பட்டு உள்ளன.
கண்காட்சி காலை 11:00க்கு துவங்கி மாலை 7:00 மணி வரை நடக்கிறது. விபரங்களுக்கு, 95004 80049, 87545 99082 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.