/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகள் அறிக்கை வெறும் கண்துடைப்பு: டி.ஆர்.பாலு காட்டம்
/
அதிகாரிகள் அறிக்கை வெறும் கண்துடைப்பு: டி.ஆர்.பாலு காட்டம்
அதிகாரிகள் அறிக்கை வெறும் கண்துடைப்பு: டி.ஆர்.பாலு காட்டம்
அதிகாரிகள் அறிக்கை வெறும் கண்துடைப்பு: டி.ஆர்.பாலு காட்டம்
ADDED : அக் 19, 2024 12:19 AM

தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில், நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது.
தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக, அமைச்சர் - எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின் வாரியம் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அப்போது, பணிகள் தொடர்பாக தயார் செய்யப்பட்ட அறிக்கையை படித்த எம்.பி., டி.ஆர்.பாலு, ''அறிக்கையில், 40 சதவீதம், 30 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அப்பணி எப்போது துவங்கப்பட்டது. இப்போது என்ன நிலைமை, இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிலைமை எப்படி இருந்தது போன்ற எந்த தகவலும் இல்லை. ஏதோ கண்துடைப்பு போல் உள்ளது. அதிகாரிகள் ஒரே இடத்தில் பணிபுரிவதால் சரியான முறையில் பணியில் ஈடுபடுவதில்லை,'' என, அதிகாரிகளை வறுத்தெடுத்தார்.
ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகளை டி.ஆர்.பாலு வறுத்தெடுத்த சம்பவம், கண்ணாடி அறையில் இருந்த நிருபர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக, உடனடியாக அங்கிருந்த ஒலிபெருக்கி துண்டிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சியில் எந்த கூட்டம் நடந்தாலும், நிருபர்கள் அறையில் ஆரம்பத்தில் ஒலிபெருக்கி இயக்கப்படுவதும், கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் அணைத்து வைக்கப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.
செய்தி சேகரிக்க அழைப்பு விடுத்து, நிருபர்களை அவமதிக்கும் செயலை, நிர்வாகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

