/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி பஸ் நிலையம் படுமோசம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
/
பூந்தமல்லி பஸ் நிலையம் படுமோசம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
பூந்தமல்லி பஸ் நிலையம் படுமோசம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
பூந்தமல்லி பஸ் நிலையம் படுமோசம் எப்போதான் கவனிப்பீங்க ஆபீசர்ஸ்?
ADDED : நவ 09, 2024 12:23 AM

பூந்தமல்லி, ன்னை பெருநகரத்திற்கும், மேற்கு பகுதி மாவட்டங்களுக்குமான நுழைவாயிலாக பூந்தமல்லி உள்ளது.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை; வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலை; மவுன்ட் - பூந்தமல்லி சாலை; ஆவடி- - கரையான்சாவடி சாலை; குன்றத்துார்- - கரையான்சாவடி சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது.
சென்னை புறநகரில் பூந்தமல்லி நகராட்சி உள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்கள் போக்குவரத்து வசதிக்காக, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படவில்லை என பயணியர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இங்குள்ள பிரச்னைகள் பின்வருமாறு:
கட்டண கழிப்பறை நான்கு மாதங்களாக மூடிக் கிடக்கிறது. இதற்கு மாற்றாக, அண்மையில் கட்டப்பட்ட சிறிய கழிப்பறை கட்டண கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உள்ளே நான்கு கழிப்பறைகள் மட்டும் இருப்பதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது
பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் இலவச கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் வசதி இல்லை
பூந்தமல்லி நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிக்கு வரும் வாகனங்கள், பேருந்து நிலையத்தின் உள்ளே ஆக்கிரமித்து இடையூறாக நிறுத்தப்படுகின்றன
பூந்தமல்லி டிரங்க் சாலையில் நெரிசல் ஏற்படுவதால், அந்த வழியே செல்ல வேண்டிய பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளே நுழைந்து செல்வதால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை திருப்ப முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்
பேருந்து நிலைய கட்டடங்களில் 'போஸ்டர்' ஒட்டப்பட்டு, அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது
24 மணி நேரம் அரசு பேருந்துகள் வந்து
செல்லும் நிலையில், இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே போதையில் படுத்து துாங்குவதால், பயணியர் அச்சமடைகின்றனர்
பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் பயணியரை ஏற்றிச் செல்ல மினி வேன்களும், பேருந்து வெளியேறும் பகுதியில் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது
பேருந்து நிலையத்தின் உள்ளேயும், வெளியேறும் 60க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், பயணியருக்கு இடையூறாக உள்ளன.
பூந்தமல்லியில் மெட்ரோ மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெற்று, சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பூந்தமல்லியை அழகுபடுத்தும் வகையில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.