/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் துாக்கி பழுதால் அலுவலர்கள் சிரமம்
/
மின் துாக்கி பழுதால் அலுவலர்கள் சிரமம்
ADDED : ஆக 18, 2025 02:36 AM
சென்னை;தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாக கட்டடத்தில் உள்ள மின்துாக்கி ஓராண்டாக பழுதாகி இருப்பதால், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில், மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
இந்த கட்டடத்தில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தங்கள் தேவைகளுக்காக வரும் பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில், மின்துாக்கி வசதி உள்ளது.
இந்த மின்துாக்கி, ஓராண்டுக்கும் மேல் பழுதாகி உள்ளதால், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் படிகளில் ஏறி, பல மாடிகள் செல்ல வேண்டியுள்ளதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
செயல்படாமல் முடங்கியுள்ள மின்துாக்கியை சீரமைக்க வேண்டும் என, அரசு ஊழியர்கள் வலி யுறுத்தி வருகின்றனர்.