/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடரும் வடிகால் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
தொடரும் வடிகால் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தொடரும் வடிகால் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தொடரும் வடிகால் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : அக் 19, 2024 12:44 AM

ஆவடி, ஆவடி செக்போஸ்ட், சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், 'எஸ்.பி.டிரேடர்ஸ்' என்ற பெயரில், பழைய மரக்கழிவுகளை விற்கும் கடை உள்ளது. அந்த கடையின் வியாபாரம் சார்ந்த பழைய பொருட்களை, வடிகால் மீது அடுக்கி வைத்துள்ளனர்.
இதனால், அங்கிருந்த வடிகால் இருக்கும் இடம் தெரியாமல் மாயமாகி உள்ளது. வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பழைய கழிவுகள் அதில் விழுந்து, வடிகால் அடைப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்றி அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.