/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு
/
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 04, 2025 11:58 PM
மேற்கு மாம்பலம், மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில், பாஷ்யகார ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் தெற்கு மற்றும் மேற்கு சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் மழைநீர் வடிகால் செல்கிறது.
இந்த வடிகாலை ஆக்கிரமித்து, மேற்கு பகுதியில் ஏழு வீடுகள், தெற்கு பகுதி ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவில் 12 வீடுகள் கட்டப்பட்டுள்ளன..
இதனால், மழைநீர் வடிகால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவில் உள்ள 12 வீடுகளில் 7 வீடுகளுக்கு டிச., 17ல் ஹிந்து அறநிலையத் துறை சார்பில் 'சீல்' வைக்கப்பட்டது.
இந்நிலையில், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அத்துடன், வீடுகள் உள்ள நிலத்தின் தன்மை மற்றும் அதன் உரிமையாளர் குறித்து அறிக்கை அளிக்கும்படி, வட்டாட்சியருக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.