/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாப் சாலை தடுப்பால் ஆவேசம் திரும்பி சென்ற அதிகாரிகள்
/
லுாப் சாலை தடுப்பால் ஆவேசம் திரும்பி சென்ற அதிகாரிகள்
லுாப் சாலை தடுப்பால் ஆவேசம் திரும்பி சென்ற அதிகாரிகள்
லுாப் சாலை தடுப்பால் ஆவேசம் திரும்பி சென்ற அதிகாரிகள்
ADDED : அக் 09, 2024 12:18 AM
சென்னை,
மெரினா லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாயில், புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, ஆக., 12ல் திறந்து வைத்தார்.
இதையடுத்து, கடை பயனாளிகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, கடைகள் ஒதுக்கீட்டுக்கான 'டோக்கன்' வழங்கப்பட்டது.
எனினும் பலர், லுாப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகளை நடத்தி வந்தனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், நேற்று முன்தினம் சென்று, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக கடைகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க, லுாப் சாலையை ஒட்டி 2 அடி உயரத்திற்கு கான்கிரீட் தடுப்பு கற்கள் அமைப்பதற்காக, பொறியாளர் கிளின்டன் தலைமையில், 20 ஊழியர்கள், நேற்று காலை அங்கு கூடினர்.
இதையறிந்த மீனவர்கள், பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தடுப்பு கற்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அப்பணியை கைவிட்டு, மாநகராட்சி ஊழியர்கள் திரும்பினர்.
மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, காலை 11:00 மணியளவில் மாநகராட்சி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் தடுப்பு கற்கள் அமைக்கும் பணியை கைவிட்டுச் சென்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தற்காலிகமாகவே பணியை நிறுத்தியுள்ளோம். லுாப் சாலை முழுதும் விரைவில் தடுப்பு கற்கள் அமைக்கப்படும்' என்றார்.
மீனவர்கள் கூறுகையில், 'தடுப்பு கற்கள் அமைத்தால், புயல், கடல் சீற்றம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் ஏற்படும்போது மீன்பிடி படகுகள், வலைகள், இயந்திரங்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல சிரமமாக இருக்கும். எனவே, தாழ்வான நடைபாதையை கட்ட வேண்டும்' என, மீனவர்கள் தெரிவித்தனர்.