/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாயில் மீண்டும் எண்ணெய் படலம்
/
பகிங்ஹாம் கால்வாயில் மீண்டும் எண்ணெய் படலம்
ADDED : செப் 29, 2025 02:31 AM

எண்ணுார்: சென்னையில், 42 கி.மீ., பயணிக்கும் பகிங்ஹாம் கால்வாய், திருவொற்றியூர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், எர்ணாவூர், எண்ணுார் சென்று, முகத்துவாரம் வழியாக, கடலில் கலக்கிறது.
இந்நிலையில், 2023ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள், பகிங்ஹாம் கால்வாயில் கலந்ததால், எண்ணுார் மீனவர்களின் படகு, வலை உள்ளிட்ட உபகரணங்கள், திருவொற்றியூர் மேற்கு பகுதியின் வீடுகள் நாசமாயின. அன்று துவங்கி இன்றுவரை, பகிங்ஹாம் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் படரும் பிரச்னை தொடர்ந்து வருகிறது.
ஆனால், இம்முறை நிறுவனங்களால் இன்றி, தனி நபர்களால் பகிங்ஹாமில் எண்ணெய் கழிவு கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரணம், சடையங்குப்பம் மேம்பாலத்தில் இருந்து, எண்ணுார் முகத்துவாரம் வரை மட்டுமே, எண்ணெய் கழிவு படலம் மிதப்பதை காணமுடிகிறது.
எண்ணுார், எர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளில், லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள், பகிங்ஹாமில் ஊற்றி செல்கின்றனர். அவை, ஆசிட் கழிவுகளாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.