ADDED : செப் 29, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில், பண்டிகை காலங்களில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆயுதபூஜைக்கான 10 நாள் சிறப்பு சந்தை, உணவு தானிய அங்காடியில், கடந்த 25ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.
அங்கு, பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகின்றன. 10 வாழை கன்றுகள் அடங்கிய ஒரு கட்டு, 300 - 400 ரூபாய்க்கும், பொரி மூட்டை 400 - 500 ரூபாய்க்கும், 10 எண்ணிக்கை உடைய தோரணங்கள் 50 - 70 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
சிறப்பு சந்தை விற்பனை இன்னும் சூடு பிடிக்காததால், மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் விற்பனை சூடு பிடிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.