/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறும் டெலிவரி ஊழியர்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீஸ்
/
விதிமீறும் டெலிவரி ஊழியர்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீஸ்
விதிமீறும் டெலிவரி ஊழியர்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீஸ்
விதிமீறும் டெலிவரி ஊழியர்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீஸ்
ADDED : செப் 29, 2025 02:32 AM
சென்னை: 'போக்குவரத்து விதிகளை மீறினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் நடத்திய ஆய்வில், வீடுகளுக்கு 'ஆன்லைன்' மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், சிக்னல்களை மீறுதல், எதிர் திசையில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருவதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனால், ஐந்துக்கும் மேற்பட்ட டெலிவரி ஊழியர்களை நேரில் அழைத்து, அவர்களிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.
அப்போது, அவர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. இனியும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் 'உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்' என, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அதேபோல, கிண்டியில் உள்ள, செல்லம்மாள் மகளிர் கல்லுாரியில், புதிதாக சாலைப் பாதுகாப்பு கிளப் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 120க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.