ADDED : அக் 03, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துாரை அடுத்த சிறுகளத்துார், நாகரத்தினம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன், 74. நேற்று காலை, கெலடிப்பேட்டை அருகே குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அன்பழகன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, முதியவர் மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.