ADDED : நவ 26, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 70; குரோம்பேட்டையில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை, பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில், நாகல்கேணி சிக்னல் அருகே நடந்து சென்றார்.  அப்போது, பின்னால் வந்த கிரேன், ஆறுமுகம் மீது மோதியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கிரேன் ஓட்டுனரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியை சேர்ந்த ஸ்ரீதரன், 35, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

