ADDED : ஜூலை 10, 2026 12:54 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 38. இவரது சகோதரர் சேகர், 40. இவரது மனைவி ரேவதி, 35, மகள் சுபா, 17.
நேற்று இரவு, வீட்டின் முகப்பில், இரும்பு கம்பியில் காய வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்க ரேவதி சென்றார். அப்போது மழை பெய்தது.
அந்த சமயம், உயரழுத்த மின் கம்பியை உரசியபடி இருந்த தென்னை மரத்தின் வழியாக, துணி காயப்போட்ட இரும்பு கம்பியில் மின்சாரம் கசிந்ததாக கூறப்படுகிறது.
இதில் ரேவதி மீதும், அவரை காப்பாற்ற முயன்ற மற்றவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. நாகராஜ் அங்கேயே இறந்தார். மூவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
