sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்ப ஆதிக்கம்; இபிஎஸ்

/

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்ப ஆதிக்கம்; இபிஎஸ்

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்ப ஆதிக்கம்; இபிஎஸ்

கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்ப ஆதிக்கம்; இபிஎஸ்


ADDED : ஆக 08, 2025 10:03 AM

Google News

ADDED : ஆக 08, 2025 10:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று ஸ்ரீவில்லிப்புத்துாரில் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் கொடுப்பதாக சொல்லப்பட்ட சமையல் எரிவாயு மானியம் கொடுக்கவில்லை, மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை.

வாங்கும் பொருட்கள் எல்லாமே லாரியில் தான் வருகிறது. அதற்கு டீசல் தேவை. டீசல் விலை குறைத்தால், எல்லா பொருட்கள் விலையும் குறையும்.

அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 4,000 அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுதும் கொண்டு வரப்படும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 15 லட்சம் மருத்துவ முகாம்கள் நடத்தியிருக்கிறோம்.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், இன்றைய நிலைமை வேறு. கடலுாரில் சளி, காய்ச்சல் என்று அரசு மருத்துவமனைக்குப் போனால், நாய்க்கடி ஊசி போட்டு அனுப்பி உள்ளனர்.

திடீர் ஞானோதயம் வந்து, 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்போம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தி.மு.க., ஆட்சி மிச்சமிருப்பதே 7 மாதம். அதற்குள் எப்படி கொடுப்பர்? கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொடுத்தோம். அதில், 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகி உள்ளனர்.

தி.மு.க.,வில் ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி செயலர், கனிமொழி மகளிரணி செயலர், மூன்று பெரிய பதவிகளையும் அந்த குடும்பத்தினரே வைத்துள்ளனர். கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது.

தி.மு.க.,வில் ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி செயலர், கனிமொழி மகளிரணி செயலர், மூன்று பெரிய பதவிகளையும் அந்த குடும்பத்தினரே வைத்துள்ளனர். கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்பமே ஆதிக்கம் செலுத்துகிறது.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புகார் பெட்டி திட்டம் கொண்டு வந்தார், ஆட்சி அமைந்ததும், மனுக்களில் கூறப்பட்டிருக்கும் குறைகளை எல்லாம் தீர்த்து விட்டேன் என்றார். இப்போது மீண்டும் மனுக்கள் வாங்குகிறார். அது எதற்காக?

பனையேறும் தொழிலாளர்கள் தவறி விழுந்தால் நிவாரணம் வழங்குவோம், காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவர்.அதற்கான பிரீமியத்தை அரசே செலுத்தும், மரம் ஏறுவதற்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us