/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரேயர் டி - 20 மகளிர் கிரிக்கெட் 'பர்பிள் பிளேஸர்' அணி அசத்தல்
/
பிரேயர் டி - 20 மகளிர் கிரிக்கெட் 'பர்பிள் பிளேஸர்' அணி அசத்தல்
பிரேயர் டி - 20 மகளிர் கிரிக்கெட் 'பர்பிள் பிளேஸர்' அணி அசத்தல்
பிரேயர் டி - 20 மகளிர் கிரிக்கெட் 'பர்பிள் பிளேஸர்' அணி அசத்தல்
ADDED : ஆக 08, 2025 02:03 AM
சென்னை, பிரேயர் 'டி - 20' மகளிர் கிரிக்கெட் போட்டியில், பர்பிள் பிளேஸர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மகளிருக்கான பிரேயர் கோப்பை 'டி - 20' கிரிக்கெட் லீக் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 'டாஸ்' வென்ற எல்லோ சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த பர்பிள் பிளேஸர் அணி, வீராங்கனையர் பவித்ரா ஸ்ரீதரன், 23, ராகவி, 32, திரிஷா மது, 37, ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 109 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய எல்லோ சேலஞ்சர்ஸ் அணிக்கு, துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி வீராங்கனையர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் முடிவில், 86 ரன்கள் மட்டுமே எடுத்து, அதிர்ச்சி தோல்வி அடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.