/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் நான்கில் ஒருவருக்கு தவறான முடிவு
/
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் நான்கில் ஒருவருக்கு தவறான முடிவு
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் நான்கில் ஒருவருக்கு தவறான முடிவு
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் நான்கில் ஒருவருக்கு தவறான முடிவு
ADDED : டிச 26, 2025 05:12 AM
சென்னை: மார் பக புற்றுநோய் பரிசோதனையில், நான்கில் ஒருவருக்கு தவறான முடிவுகள் கிடைப்பதாக, சென்னை மார்பக மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அம்மையத்தின் இயக்குநர் செல்வி ராதாகிருஷ்ணா கூறியதாவது:
சென்னையில் 12 வயது முதல் 93 வயது வரையிலான, 12,156 பேரிடம், கடந்தாண்டில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், நான்கில் ஒருவருக்கு, தவறான முடிவுகள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ரத்த பரிசோதனை, திசு பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகள் தனித்தனியாக வெவ்வேறு ஆய்வகங்களில் செய்யப்படுவதால் முடிவுகள் தவறாகிறது.
அதன்படி, மார்பக திசு பரிசோதனை செய்தவர்களில், 25 சதவீதம் பேருக்கு முடிவுகள், சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன.
அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அதன்படி, 120 பேருக்கு மீண்டும் 'பயாப்ஸி' சோதனை தேவைப்பட்டது. அதில், 62.5 சதவீதம் பேருக்கு புற்றுநோய் உறுதியானது.
ஆனால், 37.5 சதவீதம் பேருக்கு சாதாரண கட்டி என்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக, நான்கில் ஒருவருக்கு தவறான முடிவுகள் கிடைக்கிறது.
எனவே, மார்பக புற்றுநோய் பரிசோதனை ஆகியவற்றை ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களில் செய்வது, பாதிப்பின் தன்மையை உறுதி செய்ய உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

