/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது
/
போதை தகராறில் ஒருவர் பலி சக தொழிலாளி கைது
ADDED : ஏப் 20, 2025 12:00 AM
ஐசி.எப்., உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் துர்கேஷ் குப்தா, 40, விரித்தேஷ் 27. இருவரும் சென்னையில் தங்கி, பெயின்டிங் வேலை செய்து வந்தனர்.
இருவரும் கடந்த 30ம் தேதி, அயனாவரம், மயிலப்பத் தெருவில், மூன்று மாடி கட்டடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவில், இருவரும் அதே இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாத்தின் போது, இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளியதால், மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.
பலத்த காயமடைந்த துர்கேஷ் குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் இருந்த விரிஜேசை, அங்கிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து திரும்பிய விரிஜேசை, நேற்று ஐ.சி.ஐப்., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.