/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிக்கன் சாப்பிட்டோருக்கு வாந்தி, பேதி ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'
/
சிக்கன் சாப்பிட்டோருக்கு வாந்தி, பேதி ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'
சிக்கன் சாப்பிட்டோருக்கு வாந்தி, பேதி ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'
சிக்கன் சாப்பிட்டோருக்கு வாந்தி, பேதி ஒருவர் பலி; மற்றொருவர் 'சீரியஸ்'
ADDED : ஜூலை 15, 2025 12:47 AM
பெருங்களத்துார், பெருங்களத்துார் அருகே சிக்கன் சமைத்து சாப்பிட்டதில், 'புட் பாய்சன்' ஏற்பட்டு, மேற்கு வங்க தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெருங்களத்துாரை அடுத்த வெங்கம்பாக்கம், எவர் கிரீன், 13வது குறுக்கு தெருவில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, மேற்கு வங்கத்தை சேர்ந்த நான்கு பேர் தங்கி, கட்டட பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நான்கு பேரும், அருகேயுள்ள கடையில் சிக்கன் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். சற்று நேரத்தில், நான்கு பேரில், ஐதர் அலி, 50, அஸ்தர், 35, ஆகிய இருவருக்கும், 'புட் பாய்சன்' ஏற்பட்டு, வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
இரவு முழுதும் வாந்தி, பேதியால் அவதிப்பட்ட இருவரும், மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர். நேற்று காலை பணிக்கு வந்தவர்கள், மயங்கி கிடந்த இவர்களை பார்த்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்ததில், ஐதர் அலி இறந்துவிட்டது தெரியவந்தது. ஐதர் அலியின் உடலை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்கத்தில் இருந்த அஸ்தரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.