/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்பல்லோவில் 'வெர்டிகோ'வுக்கு ஒற்றைசாளர மையம் திறப்பு
/
அப்பல்லோவில் 'வெர்டிகோ'வுக்கு ஒற்றைசாளர மையம் திறப்பு
அப்பல்லோவில் 'வெர்டிகோ'வுக்கு ஒற்றைசாளர மையம் திறப்பு
அப்பல்லோவில் 'வெர்டிகோ'வுக்கு ஒற்றைசாளர மையம் திறப்பு
ADDED : டிச 07, 2024 12:11 AM

சென்னை,
'வெர்டிகோ' என்ற சமநிலை இழப்பு மற்றும் தலைச்சுற்றல் பாதிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நரம்பியல், காது - மூக்கு - தொண்டை சிகிச்சை மையத்தை, அப்பல்லோ மருத்துவமனை துவங்கிஉள்ளது.
சென்னை, ஆயிரம் விளக்கு, அப்பல்லோ மருத்துவமனையில், இதற்கான சிகிச்சை மையத்தை, அம்மருத்துவமனை குழு துணை தலைவர் பிரீத்தா ரெட்டி துவக்கி வைத்தார்.
பிரீத்தா ரெட்டி கூறியதாவது:
'பேலன்ஸ் டிஸ்ஆர்டர்' என்ற உடல் இயக்க சமநிலை இழப்பு பாதிப்பானது, ஒருவரது வாழ்க்கை தரத்தை சிதைக்கக் கூடியது.
அதற்கு நரம்பியல் சார்ந்த பிரச்னைகளோ அல்லது காது - மூக்கு - தொண்டை சார்ந்த பிரச்னைகளோ காரணமாக இருக்கலாம். அதில் எது பிரதான காரணம் என்பதை அறிய ஒருங்கிணைந்த சேவை அவசியம். அதை கருத்தில் கொண்டே, இம்மையத்தை துவக்கியுள்ளோம்.
இங்கு 'வீடியோனிஸ்டாக்மோகிராபி, வீடியோ ஹெட் இம்பல்ஸ், மூளை ஸ்கேன், கலோரி அளவு' உட்பட பல்வேறு உயர் மருத்துவ பரிசோதனைகள், ஓரிடத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், துறை சார் வல்லுனர்களின் மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் ஒருங்கிணைந்து கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.