/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெங்காயம் ஏற்றுமதி அதிகரிப்பு கோயம்பேடில் விலை கிடுகிடு
/
வெங்காயம் ஏற்றுமதி அதிகரிப்பு கோயம்பேடில் விலை கிடுகிடு
வெங்காயம் ஏற்றுமதி அதிகரிப்பு கோயம்பேடில் விலை கிடுகிடு
வெங்காயம் ஏற்றுமதி அதிகரிப்பு கோயம்பேடில் விலை கிடுகிடு
ADDED : செப் 26, 2024 12:10 AM

சென்னை, மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உற்பத்தியைப் பொறுத்து, அங்குள்ள நாசிக் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திராவில் தற்போதுதான் வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது. அங்கிருந்து மிகக்குறைந்த அளவே வருவதால், மஹாராஷ்டிரா வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் இருந்து வங்கதேசம், இலங்கை, துபாய், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, கடந்த மாதம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 1 கிலோ பெரிய வெங்காயம், தற்போது 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தை வெங்காய மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:
மஹாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, அங்குள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கட்டுக்கடங்காமல் ஏற்றுமதி நடப்பதால், வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதுவே விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் அறுவடை தீவிரம் அடையும் போது, தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும். அதற்கு காலதாமதமாகும் என்பதால், 1 கிலோ 100 ரூபாய்க்கு மேல் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.