sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பிராட்வேயில் 15 லட்சம் லி., கொள்ளளவு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

/

 பிராட்வேயில் 15 லட்சம் லி., கொள்ளளவு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

 பிராட்வேயில் 15 லட்சம் லி., கொள்ளளவு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

 பிராட்வேயில் 15 லட்சம் லி., கொள்ளளவு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு


ADDED : பிப் 28, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்வே: பிராட்வேயில், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது.

கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, குடிநீர் குழாய்கள் மூலம் துறைமுகப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

துறைமுக பகுதி 6.4 கி.மீ., துாரம் என்பதால், நீரின் அழுத்தம் குறைவாக இருந்தது. இதனால், குடிநீர் பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக மாறியது. இதை சரிசெய்யக்கோரி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பிராட்வே, டேவிட்சன் தெருவில், 27.50 கோடி ரூபாய் மதிப்பீடில், தலா 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டும் பணி, குழாய்கள் பதிக்கும் பணியும் 2025ல் துவங்கப்பட்டன.

இப்பணிகள் முடிந்த நிலையில், முதற்கட்டமாக, 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதிய குடிநீர் தொட்டி மூலம் துறைமுகம், ஜார்ஜ் டவுன், மண்ணடி பகுதிகளில் 56, 60வது வார்டுக்கு உட்பட்ட ராஜாஜி சாலை, இப்ராஹிம் சாலை, ஜோன்ஸ் தெரு ஆகிய, 80 தெருக்களில் வசிக்கும், 70,000 குடும்பங்கள் பயனடைவர்.

மேலும் கீழ்ப்பாக்கம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, நீரின் அழுத்தம் அதிகரித்திருப்பதால், தடையில்லாமல் தினமும் காலை நேரத்தில், ஆறு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us