/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிநாட்டு ஐஸ்கிரீம் 'அமுல் ஐஸ் லான்ச்' திறப்பு
/
வெளிநாட்டு ஐஸ்கிரீம் 'அமுல் ஐஸ் லான்ச்' திறப்பு
ADDED : பிப் 11, 2025 01:19 AM

அண்ணா நகர், 'பால்' பெருட்கள் விற்பனையில் சிறந்து விளங்கும், 'அமுல்' நிறுவனம், உலகளவிலான ஐஸ்கிரீம் வகைகளை, 'அமுல் ஐஸ் லான்ச்' கடை வாயிலாக, நாடு முழுதும் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, அண்ணா நகர் 2வது அவென்யூவில், தன் 24வது கிளையை துவக்கி உள்ளது. இதை, தி ஹிந்து நாளிதழின் பிசினஸ் லைன் ஆசிரியர் ரகுவீர் சீனிவாசன், நாட்டின் 'வெண்மை புரட்சி'யின் தந்தை வர்கீஸ் குரியனின் மகள் நிர்மலா குரியன் ஆகியோர், நேற்று காலை திறந்து வைத்து, ஐஸ்கிரீம்களை சுவைத்தனர்.
நிகழ்வில், 'அமுல்' நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, அண்ணா நகர் கடையின் உரிமையாளர் கார்த்திக், மண்டல பொறுப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர்.
இது குறித்து, 'அமுல்' நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, மண்டல மேலாளர் ராஜன் கூறியதாவது:
அண்ணா நகர், 'அமுல் ஐஸ் லான்ச்' கடையில், உலகளவில் உள்ள பல நாடுகளில் இருந்து, பலவித ஐஸ்கிரீம்களை ஒரே கூரைக்குள் கொண்டு வந்துள்ளோம். எங்களது, 24வது கிளையை தமிழகத்தில் முதல் முறையாக, சென்னையில் துவங்கியுள்ளோம்.
இத்தாலி ஜெலட்டோ சாக்லேட், சுவிஸ் சாக்லேட், பெல்ஜியன் சாக்லேட், துருக்கி காபி, பிரான்ஸ் கேரமல், இங்கிலாந்து ஆப்பிள், ஸ்பானிஷ் டேங்கோ உள்ளிட்ட உலகளவிலான, 26 பிளேவர் ஐஸ்கிரீம்கள் உள்ளன. இங்கு வெளிநாட்டு பிளேவர்கள் மட்டுமே உள்ளன. தினமும் காலை 10:00 முதல் நள்ளிரவு 2:00 மணி வரை கடை இயங்கும். ஓராண்டில், 100 கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

