ADDED : ஏப் 10, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, அண்ணா சாலையில் உள்ள சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு கட்டடத்தின் முதல் தளத்தில், தேவநேய பாவாணர் அரங்கம் உள்ளது.
இதை, 1.32 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதி, 280 பேர் அமரும் வசதி, லைவ் கேமரா, உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று திறந்து வைத்தார்.
அதேநிகழ்ச்சியில், டி.ஆர்.பி., வாயிலாக தேர்வான 34 முதுகலை ஆசிரியர்கள்; டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வான 11 மூன்றாம் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர்கள்; 10 தட்டச்சர்கள், ஒரு நுாலகர் மற்றும் தகவல் உதவியாளர் என, 56 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

