/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளருக்கு உணவு வழங்க பள்ளியில் சமையல் கூடம் கட்ட எதிர்ப்பு
/
துாய்மை பணியாளருக்கு உணவு வழங்க பள்ளியில் சமையல் கூடம் கட்ட எதிர்ப்பு
துாய்மை பணியாளருக்கு உணவு வழங்க பள்ளியில் சமையல் கூடம் கட்ட எதிர்ப்பு
துாய்மை பணியாளருக்கு உணவு வழங்க பள்ளியில் சமையல் கூடம் கட்ட எதிர்ப்பு
ADDED : நவ 28, 2025 05:19 AM
உத்தண்டி: ஐந்து மண்டலங்களில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க, உத்தண்டி அரசு பள்ளியில் சமையல் கூடம் கட்ட, மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, உத்தண்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியி ல், 170 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க, இந்த பள்ளியில் சமையல் கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
பள்ளியில் மாணவ - மாண வியர் வருகை அதிகரித்து வருகிறது. கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. இங்கு பெரிய அளவில் சமையல் கூடம் அமைத்தால், மாணவ - மாணவியரின் படிப்பு பாதிக்கப்படும்.
விளையாட்டு பயிற்சியும் அளிக்க முடியாது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்தும் , அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பள்ளி வளாகத்தில் அமைக்க திட்டமிட்ட சமையல் கூடத்தை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, “வேறு இடம் கிடைக்காததால், பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் அமைக்கிறோம். மாணவ - மாணவியர் பாதிக்காத வகையில், காம்பவுண்டு சுவர் கட்டி மறைத்து, சமையல் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றனர்.

