/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுபோதையில் ஆட்டோவை குளத்தில் 'ஓட்டிய' வாலிபர்
/
மதுபோதையில் ஆட்டோவை குளத்தில் 'ஓட்டிய' வாலிபர்
ADDED : நவ 28, 2025 05:19 AM

திருநின்றவூர்: திருநின்றவூர் அருகே, மது போதையில் ஆட்டோவை குளத்தில் விட்ட வாலிபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநின்றவூர் அடுத்த பாக்கம், சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சரத், 28. வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், நேற்று காலை, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் மது போதையில் ஆட்டோ ஓட்டிச் சென்றார்.
மேலப்பேடு அருகே சென்ற போது, 15 அடி ஆழமுள்ள சுண்ணாம்பு குளத்தில் ஆட்டோ பாய்ந்துள்ளது. ஆட்டோ குளத்தில் மூழ்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், ஆட்டோவில் இருந்து தப்பித்த சரத், பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் சென்று உறங்குவது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் பொக்லைன் இயந்திரம் வரவழைத்து, ஆட்டோவை மீட்டு விசாரிக்கின்றனர்.

