/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குற்றம் சாட்டப்பட்டவர் தப்ப உதவிய பெண் இன்ஸ்., 'காத்திருப்பு'க்கு மாற்றம்

ADDED : நவ 28, 2025 05:20 AM

கோயம்பேடு: கோயம்பேடு மகளிர் காவல் நிலை யத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை தப்பிக்க உதவிய பெண் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் இருவரும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயது பெண், கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் ஒரு புகார் அளித்தார். அதில், தனக்கும், தன் கணவருக்கும் ஏற்பட்ட சண்டை குறித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று, கணவர் வெளிநாடு சென்றுவிட்டார்.
இதையறிந்த அப்பெண், வழக்கு நிலுவையில் இருக்கும்போது, காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் தாஹிரா, 43, பணம் வாங்கி கொண்டு, கணவரை தப்பவிட்டதாக, கமிஷனர் அருணிடம், புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர் பெனாசிர் பேகர் உடந்தையாக இருந்தது தெரிந்தது.
இதையடுத்து இருவரையும், காத்திருப்போர் பட் டியலுக்கு மாற்றி, மேற்கு மண்டல இணை கமிஷனர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.