/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி 'சாம்பியன்'
/
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி 'சாம்பியன்'
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி 'சாம்பியன்'
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி 'சாம்பியன்'
ADDED : ஆக 22, 2025 12:39 AM
சென்னை, சென்னையில் நடந்த 'பிரேயர்' கோப்பை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் கோப்பைக்கான மகளிர் ஒருநாள் தொடர் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்தன.
அந்த வகையில் சென்னை, ரத்தினமங்களம் தாகூர் மருத்துவ கல்லுாரி கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், க்ரீன் இன்வேடர்ஸ் அணி, ஆரஞ்ச் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது.
'டாஸ்' வென்ற க்ரீன் இன்வேடர்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீராங்கனை அனுராகினி - 52 ரன் எடுத்து, அரை சதம் கடந்து அசத்தினார்.
மோகனபிரியா - 28, அனுஷா - 36 ரன்கள் அடித்து, அணிக்கு கைக்கொடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆரஞ்ச் டிராகன்ஸ் அணிக்காக, கேப்டன் கமலினி, அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். எதிரணி வீசிய பந்துகளை பவுண்டரிக்கு தள்ளி 110 பந்தில் 120 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் வைஷ்ணவி 26 ரன்கள் சேர்த்து அணிக்கு துணைநின்றார்.
இறுதியில் ஆரஞ்ச் டிராகன்ஸ் அணி 33.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த தொடரின் சாம்பியன் ஆனது.

