/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் வைக்க உத்தரவு
/
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் வைக்க உத்தரவு
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் வைக்க உத்தரவு
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் வைக்க உத்தரவு
UPDATED : மே 16, 2025 06:41 AM
ADDED : மே 16, 2025 12:38 AM

சென்னை : சென்னையில் உள்ள தனியார் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும் விளக்க உரையும் அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பழனி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், அதற்கான விளக்கு உரையும் எழுத வேண்டும் என, கடந்த மார்ச் 24ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது.
அரசாணை அறிவுறுத்தலின்படி, திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில், அதற்கான பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன் பெறும் வகையிலும் காட்சிப்படுத்த வேண்டும்.
இதை அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.