தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தற்காலிக ஊழியர்கள் 35 பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

 தற்காலிக ஊழியர்கள் 35 பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

 தற்காலிக ஊழியர்கள் 35 பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு


ADDED : பிப் 18, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநகராட்சியில், 1999ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 35 ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், மலேரியா நோய் தடுப்புப் பணி, வரி வசூல் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மழைநீர் வடிகால்வாய் பணியாளர்கள், சாலை பணியாளர்கள் பணியிடங்களுக்கு, கடந்த 1999ம் ஆண்டு 35 பேர் நியமிக்கப் பட்டனர்.

ஓராண்டு பணிக்கு பின், இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 2000ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியவர்கள், 2006ம் ஆண்டு தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து, 35 ஊழியர்களும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:

மாநகராட்சியின் நிர்வாக தாமதம் காரணமாக, ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது. மேலும், 1999ம் ஆண்டு அரசாணை அடிப்படையில், பணி நிரந்தரம் பெறுவதற்கான உரிமையை, அவர்கள் பெற்று விட்டனர் என்பதால், 35 ஊழியர்களையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதே நேரம், இதேபோல ஒரு வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவர்களின் பணி நிரந்தரம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப் பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us