/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு வாடகை தர உத்தரவு
/
வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு வாடகை தர உத்தரவு
வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு வாடகை தர உத்தரவு
வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு வாடகை தர உத்தரவு
ADDED : ஜூலை 06, 2025 12:20 AM
சென்னை, 'சென்னையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட படகுகளுக்கான வாடகை பணம், வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் வழங்கப்படும்' என, மீன்வளத் துறை கமிஷனர் கஜலட்சுமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் வெள்ளம் மற்றும் புயல் மீட்பு பணிகளுக்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்களிடம் இருந்து பைபர் படகுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. படகுகளை இயக்க தலா இரண்டு பேர் நியமிக்கப்பட்டனர்.
அந்த படகுகளுக்கும், அதை இயக்குபவர்களுக்கும், மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி வாயிலாக, வாடகை பணம் மற்றும் சம்பளம் வழங்கப்படும் என, கூறப்பட்டது.
ஆனால், அவற்றுக்கான வாடகை பணம் மற்றும் சம்பளம், ஆறு மாதங்களாகியும் வழங்கவில்லை என, மீனவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, ஜூன் 23ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட படகுகளுக்கான வாடகை பணம் வழங்கப்படும் என, மீன்வளத்துறை கமிஷனர் கஜலட்சுமி, மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மீனவர் பத்மநாபன் கூறியதாவது:
மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு, வாடகை பணம் மற்றும் அவற்றை இயக்கியவர்களுக்கு சம்பளம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மீன்வளத் துறை கமிஷனர் கஜலட்சுமியை சந்தித்தோம்.
அப்போது அவர், வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமையில், உரிய வாடகை பணம் வழங்கப்படும் என, உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
***