/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் உறுப்பு தானம் 5 பேருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்பு தானம் 5 பேருக்கு மறுவாழ்வு
ADDED : மே 16, 2025 11:58 PM

ராயபுரம் துாத்துக்குடி மாவட்டம் உடையன்குடியைச் சேர்ந்தவர் சந்திரகுமார், 60. இவர், திருவள்ளூர், ஆரணியில் விவசாயம் சார்ந்த மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அமராவதி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 13ம் தேதி, அதே பகுதியில் உள்ள தன் நண்பரை பார்த்துவிட்டு, சந்திரகுமார் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 15ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில், சந்திரகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதன்படி, சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, தமிழக அரசு விதிகளின்படி ஐந்து நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு மருத்துவமனை தரப்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.