/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா, குட்கா கடத்திய ஓட்டேரி நபர் கைது
/
கஞ்சா, குட்கா கடத்திய ஓட்டேரி நபர் கைது
ADDED : ஜூன் 06, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்,:அயனாவரம், நியூ ஆவடி சாலையில், கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை கைமாற்றுவதாக, அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட இடத்தை போலீசார், நேற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில், 'பிளாஸ்டிக்' பையுடன் நின்ற நபரை பிடித்து சோதித்தனர்.
அவரிடம் விற்பனைக்காக, ஒரு கிலோ கஞ்சா, 20 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.
விசாரணையில், ஓட்டேரி, பாஸியம் ரெட்டி தெருவைச் சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், இவர் மீது 16 வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. நேற்று காலை கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.