/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தத்கால்' பெற 5 ரயில்களில் ஓ.டி.பி., முறை அமல்
/
'தத்கால்' பெற 5 ரயில்களில் ஓ.டி.பி., முறை அமல்
ADDED : டிச 25, 2025 05:22 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில், ஐந்து விரைவு ரயில்களில், ஓ.டி.பி., எண் கொடுத்து, தத்கால் டிக்கெட் பெறும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ரயில்கள் புறப்படும் முந்தைய நாள் காலை, தத்கால் முறையில் டிக்கெட் பெறலாம். இதன்படி, இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தத்கால் டிக்கெட் பெறும் பயணியர், ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை உறுதி செய்தபின், டிக்கெட் பெறும் முறை, ரயில்வேயில் அறிமுகமாகி உள்ளது. இந்த நடைமுறை, ரயில்வே மண்டலங்களில் படிப்படியாக அமலாகி வருகிறது.
தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - குஜராத் மாநிலம் ஆமதாபாத், சென்னை - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா, கேரள மாநிலம் ஆலப்புழா - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத், எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி., சென்னை சென்ட்ரல் - மும்பை சி.எஸ்.எம்.டி., ஆகிய ஐந்து விரைவு ரயில்களிலும் இனி, ஓ.டி.பி., எண்ணை உறுதி செய்த பிறகே, தத்கால் பெற முடியும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

