/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி செல்லா குழந்தைகள் கண்ணகி நகரில் கணக்கெடுப்பு
/
பள்ளி செல்லா குழந்தைகள் கண்ணகி நகரில் கணக்கெடுப்பு
பள்ளி செல்லா குழந்தைகள் கண்ணகி நகரில் கணக்கெடுப்பு
பள்ளி செல்லா குழந்தைகள் கண்ணகி நகரில் கணக்கெடுப்பு
ADDED : ஏப் 23, 2025 12:12 AM

கண்ணகி நகர்,கண்ணகி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,704 வீடுகள் உள்ளன. இங்கு, ஐந்து அரசு பள்ளிகள் இருந்தும், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
பள்ளி செல்லாத குழந்தைகள் தவறான வழிக்கு செல்லும் சூழல் இருந்ததால், அனைவரும் படிக்க வேண்டும் என, அரசு முடிவு செய்தது. அதற்காக, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நேற்று முன்தினம் துவங்கியது.
இது குறித்து, சமுதாய வளர்ச்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து வீடுளுக்கும் சென்று கணக்கெடுக்க, 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில், கல்வித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சமூகநலத்துறை, தொண்டு நிறுவனம், அறிவொளி அமைப்பு ஆகிய ஐந்து துறைகள் இடம் பெற்றுள்ளன.
என்ன படிக்கின்றனர், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், அதற்கான காரணம், தொடர்ந்து படிக்க விருப்பமா, பொருளாதார உதவி தேவையா, குடும்ப சூழல் போன்ற கேள்விகளுடன் கணக்கெடுப்பு நடத்துகிறோம்.
இதில், படிக்க தடையாக இருக்கும் சூழலை கண்டறிந்து, அதற்கான கவுன்சிலிங், உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இந்த பணி, 15 நாட்கள் நடைபெறும்.
சில வீடுகளில் ஒத்துழைப்பு தர முன்வரவில்லை. அதுபோன்ற வீடுகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொடர் கண்காணிப்பில் ஈடுபடும்.
இந்த கணக்கெடுப்பை வைத்து, வரும் கல்வியாண்டில் அனைவரும் பள்ளி செல்வது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.