/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் தற்கொலை முயற்சி வீட்டின் உரிமையாளர் கைது
/
இளம்பெண் தற்கொலை முயற்சி வீட்டின் உரிமையாளர் கைது
ADDED : ஏப் 26, 2025 12:20 AM
முகப்பேர், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவியான 22 வயது இளம்பெண், தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பகுதி நேரமாக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
இவர்கள், வேறு பகுதியில் குடியிருக்க இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரான சுந்தர்ராஜன், 56, என்பவரிடம், முன் வைப்பு தொகையாக கொடுத்த 6.25 லட்சம் ரூபாயை இளம்பெண் கேட்டுள்ளார்.
சுந்தர்ராஜன் பணத்தை தர மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண், எலி மருத்து பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனை தகவலின்படி நொளம்பூர் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சுந்தர்ராஜனை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.