தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தவறி விழுந்து பெயின்டர் பலி

தவறி விழுந்து பெயின்டர் பலி

தவறி விழுந்து பெயின்டர் பலி


ADDED : நவ 23, 2024 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 12:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புழல், அண்ணா நகர், பாடி குப்பம் சாலை, காமராஜ் நகரை சேர்ந்தவர் வீரா, 47. புழல் அடுத்த செந்தில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு நாட்களாக பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், முதல் மாடியில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us