/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதிப்பை பார்வையிடாத பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
/
பாதிப்பை பார்வையிடாத பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
பாதிப்பை பார்வையிடாத பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
பாதிப்பை பார்வையிடாத பழனிசாமி அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
ADDED : அக் 19, 2024 12:30 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த, ஆயிரக்கணக்கான மக்கள், 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை நீர் 542 இடங்களில் தேங்கியது. பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், மணப்பாக்கம், குன்றத்துார், மாங்காடு பகுதிகளில், மழை நீர் தேக்கத்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை, பெருங்குடி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மழை நீர் தேங்கிய இடங்களை, எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில், பழனிசாமி பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை.
இது, சென்னை மாவட்ட அ.தி,மு,க., நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில், நிவாரண குழுவை பழனிசாமி அமைத்தார். அதில் இடம் பெற்றவர்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் உதவி கரம் நீட்டவில்லை. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போதைய எதிர்கட்சி தலைவர் பழனிசாமி ஆறுதல் கூற வரவில்லை.
அரசின் மெத்தனத்தை எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார்.
இதனால் கட்சியினர், பொதுமக்களை சந்திப்பதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

